சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா, அந்த கல்லூரியின் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவின் முடிவில் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் பொறியியல் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனக் கூறினார்.







