நவசரன் நாயகன் கார்த்திக், சினிமாவில் அறிமுகமாகி 40 வருடம் ஆனதை ஒட்டி, சிறப்பு போஸ்டரை அவர் மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் ’அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகன் என்ற அறிமுகத்தோடு அமைதியாக அறிமுக மான கார்த்திக், அந்தப் படத்தில் விஸ்வநாதன் என்கிற விச்சுவாக நடித்திருந்தார். நடிகை ராதா, மேரியாகவும் அவர் அண்ணனாக, ஆக்ரோஷ வில்லன் டேவிட்டாக தியாகராஜனும் நடித்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1981 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 18) வெளியான கார்த்திக்கின் முதல் படமே, ஆஹோ ஓஹோ ஹிட். இளையராஜா இந்தப் படத்தின் பாடல்களிலும் பின்னணி இசையிலும் இசை ராஜாங்கத்தையே நடத்தியிருப்பார். ஒவ்வொரு பாடலும், நம்பர்களுக்குள் சிக்காத லைக்ஸ்களை, அப்போதே பெற்றிருந்தது, ரசிகர்களின் மனதில்.
’ஆயிரம் தாமரை மொட்டுகளே, வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே’வும் ’விழியில் விழுந்து இதயம் நுழைந்து..’, ’தரிசனம் கிடைக்காதா..?’, ‘காதல் ஓவியம்..’ உட்பட அனைத்து பாடல்களுமே அப்போது காதல் கொண்டலைந்த ’பசங்க’ளின் தேசிய கீதமாக மாறியிருந் தன.
பாரதிராஜாவின் கிளாசிக்குகளில் ஒன்றான இந்தப் படத்தில் நடித்ததற்காக, கார்த்திக்கிற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. பிறகு கார்த்திக், தனி பாதையுடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார். அந்த காலகட்டத்தில் அவருடைய கால்ஷீட் கேட்டு காத்திருந்த தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அதிகம்.
Wow Dad! 40 years already?!
So happy to release this poster made by all his fans, friends, well-wishers and supporters. He always speaks of you as family and I'm so happy to see the feeling is mutual!
Thank you all!
Congrats Dad!
So proud! 😃😃😃#40YearsOfNavarasaNayagan pic.twitter.com/lg2Q0DgEKN— Gautham Karthik (@Gautham_Karthik) July 18, 2021
இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வரும் கார்த்திக், சினிமாவில் 40 வருடத்தை நிறைவு செய்துள்ளதை அடுத்து, அவர் மகன் கவுதம் கார்த்திக், ட்விட்டரில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உருவாக்கிய இந்த போஸ்டரை வெளியிடு வதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
‘கார்த்திக்கிஷம் 40 வருஷம்’ என்று எழுதப்பட்டுள்ள அந்த போஸ்டரில் #40YearsOfNavarasaNayagan என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். இதை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.