புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பழைய நாணயங்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற அறிவிப்பு உணவு பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான் . பிரியாணி பிடிக்காது என்று சொல்பவர்கள் யாராவது இருக்க முடியுமா?? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை. இந்தியாவில் மொத்தம் 20 வகையான பிரியாணி உண்டு. அதில் எட்டு வகை பிரியாணி, இந்தியாவின் அணைத்து இடங்களிலும் கிடைக்கும். அதிலும் உலகம் முழுவதும் பெரும்பான்மை மக்களுக்குப் பிடித்த பிரியாணி என்றால் அது சிக்கன் பிரியாணி தான்.
அப்படி மக்கள் விரும்பவும் சிக்கன் பிரயாணியை வைத்து, அறந்தாங்கியில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகம் ஒன்று, தங்கள் கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு 5, 10 மற்றும் 20 பைசா நாணயங்களை கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் சில்லி சிக்கன் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த சலுகை அறிவிப்பால் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பழைய நாணயங்களை கொடுத்து பிரியாணி மற்றும் சில்லி சிக்கனை வாங்கி சென்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








