கோவை மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாணவியின் உயிரிழப்பு குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக வரும் 23-ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.







