கோவையில் மதநல்லினக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவை இரத்தனபுரி சின்னப்பர் தேவாலயத்தில் மும்மதத்தைச் சார்ந்தவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் பொதுமக்களுக்கு ரோஜக்கள் கொடுத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசு பிறந்த தினமான டிச. 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை குறிக்கும் வகையில் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிர வைத்து, பண்டிகைக்கு தயாராகி வந்தனர். மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கோவையில் மதநல்லினக்கத்தை வலியுறுத்தும் விதமாக கோவை இரத்தனபுரி சின்னப்பர் தேவாலயத்தில் மும்மதத்தைச் சார்ந்தவர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மற்றும் பொதுமக்களுக்கு ரோஜக்கள் கொடுத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.







