கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலாக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருடைய நீதிமன்றக் காவலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் விசாரணையில் இருந்து வருகின்றன. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.







