தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியை  கண்டித்தும், அரசே அவற்றை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்ய கோரியும் மாபெரும் பேரணி  நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில்…

பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியை  கண்டித்தும், அரசே அவற்றை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்ய கோரியும் மாபெரும் பேரணி  நடை பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில் ஒன்றிய தென்னை
விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடை பெற்றது. இந்த பேரணி மதுக்கூர்
வடக்கு பெரமையா கோயில் இருந்து தொடங்கி ஆற்றுப்பாலம், மெயின் ரோடு , பஜனை மட தெரு வழியாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் வந்து அடைந்தது.

மதுக்கூர் ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 36 கிராமங்களில் 33 கிராமங்கள் தென்னை விவசாயத்தை சார்ந்து உள்ளனர். ஆனால் தேங்காயின் விலை வீழ்ச்சி இந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டி போட்டு விட்டதாகவும், கஜா புயலில் ஏற்பட்ட பெரும் இழப்பிற்கு பிறகு, தற்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக தென்னை விவசாயம் மீண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தேங்காய், மற்றும் அதன் மூலப் பொருட்களின் விலை வீழ்ச்சியால் இனி வரும் காலங்களில் உணவிற்கு கூட வழியில்லாத ஒரு சூழ்நிலையை தென்னை விவசாயிகள் சந்திக்க நேரிடும் என்றும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

இதனால் தேங்காய் ஒன்றுக்கு விலை 25 நிர்ணயம் செய்து அதனை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் தேங்காய் கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 250 நிர்ணயம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடை பெற்றது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

—ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.