முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் – கிரிக்கெட் போட்டி: உயர்நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கல் அருகே பொங்கல் திருநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாஷ் வடிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுக்கா, வி.சித்தூர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜனவரி 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் 10-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார். போட்டியின்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கு அறிவிக்கும் முன், வணிகர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்: விக்கிரமராஜா

Ezhilarasan

தனது விந்தணு மூலம் பிறக்கபோகும் குழந்தைக்கு தாயாக காத்திருக்கும் திருநங்கை மருத்துவர்!

Jeba Arul Robinson

புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் ஆர்.என்.ரவி

Ezhilarasan