முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா மூன்றாவது அலை: 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா

கொரோனா மூன்றாவது அலையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு பணிகளில், முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையினரும், அதிகளவில் நோய் தொற்றுக்கு பாதிப்புள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு கொரோனா அலைகளிலும். இதுவரை 8 ஆயிரத்து 30 காவலர்களுக்கு நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

இதுவரை 143 காவலர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய மூன்றாவது அலையில் மாநிலம் முழுவதும் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 346 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இதுவரை 70 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர்: கே.பி.அன்பழகன்!

Halley Karthik

மொயீன் அலி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை” – காசி விஸ்வநாதன்

Halley Karthik

’சினிமா துறையை சிலர் வேண்டுமென்றே கொல்கிறார்கள்…’ மோகன்லால் வேதனை

Ezhilarasan