முக்கியச் செய்திகள் விளையாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும்: ஆட்சியர் அனிஷ்சேகர்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், ஜனவரி 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டியை திட்டமிட்டப்படி நடத்த முடியவில்லை என தெரிவித்தார்.

எனவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 17-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது என குறிப்பிட்டார்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை அந்தந்த ஊர் மக்கள் மட்டுமே நேரில் பார்வையிட முடியும் என்றும் மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்தார். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கு இன்று மாலை 3 மணிக்கு முன்பதிவு தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா: 486 பேர் உயிரிழப்பு!

Halley Karthik

குளிர்பானம் அருந்தியதில் சிறுமி உயிரிழந்ததாக புகார்

Jeba Arul Robinson

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு