பாமக தலைமையை ஏற்கும் கட்சியுடன் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பாமக சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பேரரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்,
10.5% உள்ஒதுக்கீடு பெற சட்டப்போராட்டம் நடத்துவதற்கு பாமக உறுதியேற்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாமகவை வலிமை மிக்க கட்சியாக உருவாக்க 2022-ஆம் ஆண்டை திண்ணை பிரசாரம் நடத்தும் ஆண்டாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








