முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் தேர்விலிருந்து முதலமைச்சர் நிச்சயம் விலக்கு பெற்றுத்தருவார்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முதலமைச்சர், நீட் தேர்விலிருந்து நிச்சயம் விலக்கை பெற்றுத்தருவார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில், கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கான 14 லட்சம் தடுப்பூசிகள், இம்மாத இறுதிக்குள் வர உள்ளதாகவும், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெறுவதால், கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசி ஒன்றிய அரசு தொகுப்பிலிருந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செங்கல்பட்டு மற்றும் குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக அமைச்சர் கூறினார். நீட்தேர்வு ரத்து தொடர்பாக ஏற்கனவே சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையோடு சேர்த்து நீட் ரத்து தீர்மானம் அனுப்ப உள்ளதாகவும், நீட் தேர்விற்கு நிச்சயம் விலக்கு பெற்று தரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜன் படுக்கை வசதியை தேடி செல்லவேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D

நீர்வரத்து அதிகரிப்பு : புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து உபரி நீர் இன்று திறப்பு

EZHILARASAN D

சென்னை பட்ஜெட்: சொத்து வரிக்கான புதிய ஏற்பாடு

Janani