உலகின் அதிவேக மனிதர் என்றழைக்கப்பட்ட ஓட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட் தன்னுடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 9 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட்செய்த சாதனைகளை முறியடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2009-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.48 விநாடிகளில் கடந்து சாதனைப்படைத்தார். உசேன் போல்டின் இந்த சாதனையை 10 ஆண்டுகள் கடந்த பின்பும் தற்போதுவரை யாரும் முறியடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி உசேன் போல்ட் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் சமீபத்தில் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் படங்களையும் பெயர்களையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு ‘Thunder Bolt and Saint Leo Bolt’ என பெயரிட்டுள்ளார் உசேன் போல்ட். இந்த பெயர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உசேன் போல்ட்டின் முதல் குழந்தையின் பெயர் ஒலிம்பியா போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.