பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் நாளை மறுநாள் சந்தித்துப் பேச உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இதற்காக நாளை பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை மறுநாள் காலை பத்தரை மணி அளவில், பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, கூடுதல் கொரோனா தடுப்பூசிகள், மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள் மற்றும் தமிழ்நாட்டில் நீட் தேர்வினை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







