தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் அழைக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.இதையடுத்து, அது அரசிதழில் வெளிடப்பட்டு சட்டமாக அமலானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், வேளாளர் என்ற பெயருக்கு அதே பெயருடைய வேறு சமூகங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தேவேந்திர குல வேளாளர் என அழைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை கோரி உலக வேளாளர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 7 பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து அளித்த மனுவை பரிசீலிக்காமலும், ஆட்சேபங்களை கேட்காமலும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கையும் 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.