தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?: முதலமைச்சர் ஆலோசனை!

ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும்போது வழங்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில்…

ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கும்போது வழங்கப்பட வேண்டிய தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை செய்து வருகிறார்.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர், பொதுத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கொரோனா தொற்று அதிகம் இருந்த கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட11 மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், அங்குப் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதியளிப்பதுடன், மேலும் மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.