முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

வெளியானது PUBG-ன் 2.0 “Battleground”

PUBG மொபைல் கேமின் இந்திய பதிப்பு பேட்டில் கிரவுண்ட் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

PUBG மொபைல் கேம் இந்தியாவில் மிக பிரபலமான ஒன்றாக இருந்தது. இளைஞர்கள் இரவும், பகலுமாக அந்த விளையாட்டிலேயே மூழ்கிக் கிடந்தனர். அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 117 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில், PUBG மொபைல் கேமும் ஒன்றாக இருந்தது. இதனால், இதற்கு மாற்று கேமை இணையம் முழுவதும் இளைஞர்கள் தேடி வந்தனர்.

அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக PUBG மொபைலின் இந்திய பதிப்பாக பேட்டில் கிரவுண்ட் மொபைல் கேம் கடந்த மே மாத தொடக்கத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை டடுன்லோட் செய்ய விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே முதலில் அதன் பீட்டா வெர்சன் கிடைக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து, அதில் பதிவு செய்தவர்களுக்கு ஜூன் 17 அன்று, இந்த கேமிற்கான முன்பதிவு செய்தவர்களுக்கான பீட்டா பதிப்பு கிடைத்தது.

இந்நிலையில், இந்த கேம் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகியுள்ளது. இதன் பீட்டா பதிப்பை டவுன்லோட் செய்தவர்கள் கேமை அப்டேட் செய்தால் மட்டும் போதுமானது. மற்றவர்கள் பிளே ஸ்டோரில் இருந்து நேரடியாக கேமை டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இது ஆண்டிராய்ட் மொபைலில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது ஐஓஎஸ் மொபைலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த கேம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட டவுன்லோடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ஊராட்சி மன்ற பெண் தலைவரை சாதியரீதியதாக திட்டியதாக அதிமுக பிரமுகர் மீது புகார்

Jeba Arul Robinson

தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இடையே உள்ள ஒற்றுமைகள்

Ezhilarasan

‘ஒன்றிய அரசு’ – திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தீர்மானம்!

Halley karthi