சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இன்று ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டு முழுவதும் 3-ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வரு கிறது. 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தற்போது 29 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் கள், நகா்ப்புற நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி சாா்பில் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, சென்னை யில் இன்று 1,600 சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது.
சென்னை, அயனாவரம் நேரு மண்டபத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.







