முக்கியச் செய்திகள் இந்தியா

நாக நதிக்கு மீண்டும் உயிர் அளித்த பெண்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

நாம் முக்கியமாக கொண்டாட வேண்டியது, ‘உலக நதி தினம்’ என பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ’மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி யின் மூலம் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார். இதனடிப்படையில், 81வது ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், சுயநலமின்றி நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளின் பங்களிப்பை நினைவுகூறும் நாளான உலக நதி தினத்தை நாம் கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.

நாம் மிக முக்கியமாகக் கொண்டாட வேண்டியது, உலக நதி தினம் என்றும், இந்தியாவின் மேற்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களில் நீர் பற்றாக்குறை நிலவுகிறது எனவும் குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுவிட்ட தமிழ்நாட்டின் திருவண்ணா மலையில் உள்ள நாகநதியை பெண்கள் இணைந்து கால்வாய்களை தோண்டி தடுப்பணை களை உருவாக்கியுள்ளனர் என பெருமையாகத் தெரிவித்தார். நாகநதிக்கு மீண்டும் உயிர் அளித்து, தூய்மை பணியில் ஈடுபட்ட பெண்களுக்கு பாராட்டு என பிரதமர் மோடி தெரிவித் தார்.

Advertisement:
SHARE

Related posts

சுற்றுச் சூழலை பாதுகாத்து வரும் இந்தியாவின் பசுமை மனிதர்

Saravana Kumar

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கான தடை நீக்கம்

Ezhilarasan

தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால் சம்பளம் இல்லை; மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Saravana Kumar