வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் சென்னையில் நீர் தேங்கிக் கிடப்பதும் போக்கு வரத்த்தில் பாதிப்பது ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. பருவமழைக்கு முன்பாகவே நீர்நிலைகளில் தூர்வாரும் நடவடிக்கை களை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு, அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இன்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, அனைத்து துறை சார்ந்த செயலாளர்கள், உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.







