முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: மும்பை அணி தோற்றாலும் ரோகித் சர்மா சாதனை

ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, ஓர் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில், அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியும் மும்பை இண்டியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயான் மார்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய டிகாக் 56 ரன்களும், ரோகித் சர்மா 33 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தனர். தொடர்ந்து வீரர்கள் ரன் குவிக்க தவறியதால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே அந்த எணி எடுத்தது.

156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீர்ர்கள் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி எதிரணியினருக்கு மிரட்டல் விடுத்தனர். ஷுப்மான் கில் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து, 53 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 74 ரன்களை குவித்தார்.

இதனையடுத்து 15.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்திற்கு கொல்கத்தா அணி முன்னேறியது.

இந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி தோல்வி அடைந்தாலும், ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தப்போட்டியில் 33 ரன்கள் சேர்த்த போது, அவர், இந்த மைல்கல்லை எட்டினார்.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் : சுனில் நரேன் மிரட்டல், விராத் அணியை வெளியேற்றியது கொல்கத்தா

Halley karthi

இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு!

Gayathri Venkatesan

அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு: நீதிபதி முருகேசன் அறிக்கை தாக்கல்

Gayathri Venkatesan