மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் புதிய மீன்வள சட்டத்தால், மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில்…

ஒன்றிய அரசின் புதிய மீன்வள சட்டத்தால், மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில் கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், துறை சார்ந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றுது. தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி துறை சார்ந்த ஆய்வு கூட்டம் மேற்கொண்டோம் என தெரிவித்தார்.

மீன்வளத்துறை அறிவிப்புகள் அனைத்தும் 6 மாதம் முதல் ஒரு ஆண்டிற்குள் நடைமுறைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அமைச்சர், ஒன்றிய அரசின் புதிய மீன்வள சட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு குறித்து, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மீனவர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.