மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், “மாநிலங்களுக்கிடையேயும் மற்றும் ஒன்றிய-மாநிலங்களுக்கிடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும், கூட்டாட்சி உறவுகளையும் வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கவுன்சிலின் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, “மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அல்லது மாநிலங்களுக்கு இடையே எழுந்துள்ள வேறுபாடுகளை களைவதற்கானது. கூட்டுறவு மற்றும் கூட்டாட்சி உறவுகளை வலுப்படுத்த கவுன்சில் ஒரு முக்கிய கருவி. மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்கள் 6 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே கூட்டப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “மத்திய அரசின் கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து மாநில மக்களின் கருத்துக்களை முன்வைக்க முதலமைச்சர்களுக்கு தளமாக அமையும். மாநிலங்களை பாதிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு கவுன்சிலில் முன் வைக்கப்பட வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.