இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பால், எரிவாயு, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.
53 வயது மதிக்கத்தக்க ஆட்டோ ஓட்டுநர், பெட்ரோலுக்காக நேற்று (ஜூன் 15) இரவு முதல் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு முன் இரண்டு நாட்களாக தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதற்கு முன்பும் இதே போன்று உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. சமையல் எரிவாயு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 64 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு காரணமாக பொதுப் போக்குவரத்து 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதேபோல் எஞ்சின் ஆயில் தட்டுப்பாடு காரணமாக ரயில் சேவையையும் நிறுத்தப்படும் என்று அந்நாட்டு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்திடம் இருந்து 1948ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டில் தான் மிகக் கடுமையான பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அதிபர் ராஜபக்ச சகோதரர்கள்தான் என்று கூறி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜிநாமா செய்தார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
எரிபொருள் வழங்க புதிய நடைமுறை
இதனிடையே, எதிர்வரும் நாட்களில் எரிபொருள் வழங்குவதற்கு புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருள் விநியோக முறைமைக்கு அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
-மணிகண்டன்








