மே 1 -முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

நாட்டில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க கடந்த ஜனவரி16-ம் தேதி முதல் தடுப்பூசிகள்…

நாட்டில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க கடந்த ஜனவரி16-ம் தேதி முதல் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

அதைதொடர்ந்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடைபெற்ற சுகாதாரத் துறை வல்லூநர்களுடனான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட அளவில் மருந்தகங்களுக்கு தடுப்பூசிகளை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தில் பங்கெடுத்த முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.