முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொங்கலுக்கு மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த ஆடைகள் விறுவிறு விற்பனை

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறைக்கைதிகள் தைத்த  ஆடைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் ஆயுள் தண்டனை
கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதிகள் தண்டனை காலம் முடிந்து, விடுதலையாகும் போது, அவர்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தும்
விதமாக சிறை வளாகத்திற்குள் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்பயிற்சியின் மூலம் பூந்தொட்டிகள், சிமெண்ட் கிராதிகள், மருத்துவ பேண்டேஜ்,
இனிப்பு வகைகள் போன்ற பொருட்களை கைதிகள் தயாரிக்கின்றனர். இதனை சிறைத்துறை நிர்வாகம் கைதிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி 13 தையல் இயந்திரங்கள் மூலம் ஆடைகள் தைக்க 18க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைகள் தைக்கப்பட்டுள்ளது

இப்பொருட்கள் அனைத்தும் சிறைத்துறை அங்காடி மூலம் பொதுமக்களுக்கு
விற்கப்படுகின்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை காவலர்கள் உதவியுடன் சிறைக்கைதிகள் ஆடைகளை சிறை அங்காடியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக 300-550 ரூபாய் வரை ஆடைகள் வைக்கப்பட்டு விலைக்கேற்ற தரத்துடன்
ஆடைகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆடைகளில் FREEDOM என்ற பெயரில் சிறை அங்காடியில் கைதிகள் மற்றும் சிறைக்காவலர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

கைதிகள் தைத்த ஆடைகளை பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

EZHILARASAN D

பிரியாணி பொட்டலங்களைக் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்!

EZHILARASAN D

அவன்தான் மகா நடிகன்…

Arivazhagan Chinnasamy