“செப்டம்பர் 8ம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்” – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்பதை தொடர்ந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வேளாண் பட்ஜெட் நாளை சட்டமன்றத்தில் நடைபெறும். வரும் ஆகஸ்டு 7ம் தேதி (நாளை மறுநாள்) முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஆகஸ்டு 8,9ம் தேதிகள் அரசு விடுமுறை, ஆகஸ்டு 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் தொடரும். காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டம் தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நடைபெறும். ஆகஸ்டு 12ம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.