விழுப்புரம்: அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மூடல் – மக்கள் அவதி

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் மூடப்பட்டு பழைய உடைந்த பொருட்களை போடும் இடமாக மாறியுள்ளது பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த…

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த அம்மா
உணவகம் மூடப்பட்டு பழைய உடைந்த பொருட்களை போடும் இடமாக மாறியுள்ளது பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இயங்கி வந்த அம்மா உணவகம்
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மூடப்பட்டுள்ளது. தற்போது அம்மா உணவகம்
இருந்த இடத்தில் மருத்துவமனையில் உடைந்த இருக்கைகள் சிமெண்ட் மூட்டைகள்
பிளம்பிங் பைப்புகள் வைக்கும் இடமாக மாறியுள்ளது.

அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிமக்கள் பயன்பெறமுடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். அம்மா உணவகம் செயல்பட்டு கொண்டிருந்தபோது மருத்துவமனைக்கு வருபவர்கள் உணவருந்தி சென்றனர். பல மாதங்களாக அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளதால் அதனை திறக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.அம்மா உணவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு
மூடவில்லை என்று தெரிவித்திருக்கிற போது, முண்டியமப்பாக்கம் அரசு
மருத்துவமனையில் அம்மா உணவகம் மூடப்பட்டு பழைய பொருட்கள் போடும் இடமாக
மாறியுள்ளது பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.