குலதெய்வ வழிபாட்டிற்கு சென்ற இளைஞர்களுக்குள் மோதல் – கத்தியால் குத்தி ஒருவர் பலி: இருவர் கைது!

திருச்சி, முசிறி அருகே குலதெய்வ வழிபாட்டிற்கு சென்ற இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டார். முசிறி போலீசார் உடலை கைப்பற்றியதோடு இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி…

திருச்சி, முசிறி அருகே குலதெய்வ வழிபாட்டிற்கு சென்ற இளைஞர்களுக்குள்
ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டார். முசிறி போலீசார் உடலை கைப்பற்றியதோடு இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முசிறி அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சோழராஜா பட்டாளம்மன்
குடி பாட்டு கோயிலுக்கு உரிய பங்காளிகள் நேற்று இரவு பொங்கல் வைத்து திருவிழா நடத்தியுள்ளனர். இத்திருவிழாவிற்கு மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலி அருகேயுள்ள சுனைபுகநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பொங்கல் வைத்து விருந்து வைத்துள்ளார்.

இந்த விருந்திற்கு சுனைப்புகநல்லூரை சேர்ந்த தீபக் (18) சென்றுள்ளார் – இதே போல சுனைப்புக நல்லூர் சேர்ந்த உதயகுமார் (31) உதய பிரகாஷ் ( 27) ஆகிய இருவரும் சுக்காம்பட்டியில் நடைபெற்ற ராம்குமார் என்பவருடைய வீட்டின் விருந்துக்காக சென்றுள்ளனர்.

அப்போது தீபக் மற்றும் உதயகுமார், உதயபிரகாஷ் மற்றும் சிலருடன் வாய் தகராறு
ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் தீபக்கை கத்தியால் குத்தியதில் அவர்
சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தகவல் அறிந்த முசிறி காவல் நிலைய போலீசார் – சம்பவ இடத்திற்கு சென்று தீபக் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகத்தின் பேரில் உதயகுமார் மற்றும் உதயபிரகாஷ் ஆகிய இருவரையும் கைது
செய்து விசாரணை நடத்தியதில்  உண்மை வெளிவந்தது. இதில் சம்பந்தப்பட்ட தப்பியோடியதாக கூறப்படும் விஜயகுமார், வெங்கடேஷ் ஆகிய இருவரையும் முசிறி போலீசார் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.