ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை! சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை, சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், எழுத்தாளர் திருநாவுக்கரசு…

ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை, சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், எழுத்தாளர் திருநாவுக்கரசு – தொ.மு.ச பேரவையின் முன்னாள் துணை தலைவர் வி.எம்.ஆர்.சபாபதி அவர்களின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை பார்க்கிறீர்கள். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. செப் 15 கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் துவங்கப்படும். சிலருக்கு இந்த திட்டம் குறித்து பொறாமை, எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இன்று இந்தியாவிற்கு பேராபத்து வந்துள்ளது, நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையாவது நிறைவேற்றி உள்ளதா? 15 லட்சம் இல்லை 15 ரூபாயாவது வழங்கி உள்ளாரா மோடி?

விவசாயிகள் நலனை பாதுகாப்போம் என சொல்லி அட்சிக்கு வந்தவர்கள், டெல்லியில் விவசாயிகள் போரட்டயம் நடத்திய போது கண்டுகொள்ளாமல் இருந்தனர். இந்த மோசமான சர்வாதிகார ஆட்சியை போக்கி இந்தியவிற்கு நல்ல எதிர்காலம் தர வேண்டி பீகாரில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடந்த்து. எதிர்கட்சிகள் கூட்டத்தால் எரிச்சலடைந்த பிரதமர் , தான் பிரதமர் என்பதையும் மறந்து கருத்துகளை கூறி வருகிறார்.

பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம். என் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவு கவலை இல்லை… நமது கொள்கை , லட்சியத்தை மனதில் வைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இறுதியாக மணமக்களை குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் எனக் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய் இருங்கள் என வாழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.