முக்கியச் செய்திகள் பக்தி

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி – சுந்தரேசுவரர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் இன்று காலை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றதை தொடர்ந்து, சுந்தரேசுவரர் சார்பிலும் மீனாட்சியம்மன் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்த சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது.

பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மீனாட்சியம்மனுக்கு வைர கற்கள் பதித்த திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் பக்தி கோஷங்கள் முழங்க மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்று முடிந்தது. திருமண முடிந்த சில நிமிடங்களில் மதுரை மாநகரத்தில் மழை பெய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram