முக்கியச் செய்திகள் கட்டுரைகள் Health

இரவில் தூக்கம் வரவில்லையா? இதைப் படிங்க முதல்ல…


த.எழிலரசன்

இரவில் இயல்பாக வரக்கூடிய தூக்கம் இன்று சிலருக்கோ , எப்போது தூக்கம் வரும் என்ற ஏக்கமாக மாறி உள்ளது. இன்னும் சிலருக்கு மாத்திரை போட்டால் தான் தூக்கம் என்ற நிலையில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு இயற்கை முறையில் என்ன தான் தீர்வு என யோகா மற்றும் இயற்கை மருத்துவர் நேவிஸ் ராணி அளித்த டிப்ஸை பார்க்கலாம்.

முதலில் நம்முடைய சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரத்தை தூங்குவதற்காக முதலில் தீர்மானிக்க வேண்டும். அந்த நேரத்தில் கட்டாயம் படுக்கைக்கு சென்று விளக்கை அணைத்துவிட்டு படுக்க வேண்டும். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், எளிதில் செரிமானமாகும் உணவுகளை இரவில் எடுத்துக்கொள்வது நல்லது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் மொபைல் , டிவி, லேப்டாப் போன்ற அனைத்து சாதனங்களையும் தூங்க செல்லவதற்கு ஒரு மணி நேரம் முன்பே அணைத்து வைத்துவிட வேண்டும். மேலும் காலை வெயிலில் 20 நிமிடங்கள் கட்டாயம் நிற்க வேண்டும். குறைந்தபட்சம் காலை 10 மணிக்குள்ளாக வெயிலில் நிற்க வேண்டும். காலை வெயிலில் நிற்பதன் மூலம் மெலடோனின் ஹார்மோன் சுரப்பது சீராகும். இதன்மூலம் இரவு தூங்கும் போது மெலடோனின் ஹார்மோன் சரிவர சுரந்து தூக்கம் வர செய்யும்.

மாத்திரை எடுத்துக்கொண்டால் தான் தூக்கம் வரும் என்பவர்களும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றலாம். ஆனால் தொடர்ந்து தூக்கமின்மை இருக்கும் பட்சத்தில் இயற்கை மருத்துவரை அணுகினால், மேலும் பல சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் மாத்திரைகள் இல்லாமல் இயல்பாக தூங்கும் பழகத்திற்கு மாறாலாம்.

தூக்கமின்மை தொடர்ந்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் வரக் கூடும் எனவே தூக்கமின்மை பிரச்னையை அலட்சியம் செய்ய வேண்டாம் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

Arivazhagan Chinnasamy

அக்னி பாத் திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது மத்தியஅரசு

Web Editor

தமிழ்நாட்டில் புதிதாக 1,661 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

G SaravanaKumar