முக்கியச் செய்திகள் தமிழகம்

பொம்மை யானையை சேதப்படுத்திய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே பழங்குடியினர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த யானை பொம்மையை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அருங்காட்சியத்தில் பழங்குடியினரின் வாழ்க்கை முறை குடியிருப்புகள், வேட்டையாடும் முறை என பல்வேறு வகையில் உருவ பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அருங்காட்சியத்தில் தத்ரூபமாக யானையின் உருவபொம்மை வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அருங்காட்சியகத்திற்குள் புகுந்தது. அப்போது பொம்மை யானையை தந்தத்தால் குத்தி அதனை கீழே தள்ளியது. தொடர்ந்து அந்த காட்டு யானை, பொம்மை யானையை காலால் மிதித்து உடைத்தெறிந்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த மற்ற வன விலங்குகள் மற்றும் மனித உருவ பொம்மைகளை பத்திரமாக வேறு பகுதிகளில் இடமாற்றம் செய்தனர்.

காட்டு யானை என்று நினைத்து பொம்மை யானையை உடைத்து தள்ளிய சம்பவம் வனத்துறையினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Gayathri Venkatesan

அதிமுகவில் டிடிவி தினகரன்?

Niruban Chakkaaravarthi

ஒரு பாட்டு எப்படி இருக்கணும்னா..? இளையராஜா

Gayathri Venkatesan

Leave a Reply