விண்வெளி நிலையத்தை சென்றடைந்த 3 சீனா வீரர்கள்!

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்திலிருந்து சீனா விலக்கிவைக்கப்பட்டது. இதனால்,…

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளுக்காக 3 வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்திலிருந்து சீனா விலக்கிவைக்கப்பட்டது. இதனால், தமக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

தியான்ஹோ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்திற்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எரிபொருள், விண்வெளி உடைகள், உணாவுப்பொருட்களுடன் தியான்சோ-2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 3 விண்வெளி வீரர்களை, சென்ஷூ 12 என்ற விண்கலத்தில் சீனா அனுப்பியுள்ளது. இவர்கள் 3 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என சீனா தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.