அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழர் ஒருவர் தேர்வு!

அமெரிக்காவின் இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா நாட்டில் உள்ள 131 வருட பழமையானதும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமுமான இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி…

அமெரிக்காவின் இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா நாட்டில் உள்ள 131 வருட பழமையானதும், உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமுமான இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி தேர்வாகியுள்ளார். இலினொய் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையா ராஜகோபால் பெற்றிருக்கிறார்.

53 வயதாகும் ராஜகோபால் ஈச்சம்பாடி சென்னையில் பிறந்து, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தவர். அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரியான கிண்டி கல்லூரியில் தனது பொறியியல் படித்தார். பின்னர் எம்.பி. ஏ முதுகலைப்பட்ட படிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.

இலினொய் பல்கலைக்கழக 10 ஆவது தலைவராக வரும் ஆகஸ்ட் 16 இல் பொறுப்பேற்கிறார் ராஜகோபால் ஈச்சம்பாடி. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக ராஜகோபால் ஈச்சம்பாடி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.