ஐக்கிய அரபு நட்டில் விண்வெளி ஆராய்ச்சிப் பயிற்சிக்காக தேர்வான முதல் பெண்!

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நொரா அல் மற்றொஷி என்ற முதல் பெண் விண்வெளி வீராங்கனை பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில், விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்குப்…

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நொரா அல் மற்றொஷி என்ற முதல் பெண் விண்வெளி வீராங்கனை பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில், விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பெருமளவில் வெளிநாட்டவர்களை அந்நாடு பயன்படுத்தி வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஆர்வமுள்ள ஆந்நாட்டு மக்களை ஈடுபடுத்த வேண்டி, அவர்களை ஊக்குவிப்பதற்காக 2017ஆம் ஆண்டு, தேசிய விண்வெளி ப்ரோகிராம் என்ற பயிற்சி திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்தது. இதற்கு அந்நாட்டு இளைஞர்களிடம் இருந்து பெரும் ஆதரவுக் கிடைத்தது.

இந்நிலையில், இந்தாண்டிற்கான விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி திட்டத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த 27 வயதான நொரா அல் மற்றொஷி, என்ற முதல் பெண், விண்வெளி வீராங்கனை பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முகமது பின் ரஷீத் விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

அவர்களுக்கு வந்திருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களில் நொரா அல் மற்றொஷியுடன் முகமத் அல் முல்லா ஆகிய இரண்டு பேரைத் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின், விண்வெளி வீரர்களுக்கான இந்தாண்டிற்கான பயிற்சி வகுப்பில் இணைய உள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முதல்முறையாகக் கடந்த 2019ஆம் ஆண்டு ஹசா அல் மன்சவுரி என்பவர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.