“ஒரு பக்கம் குழந்தைகள் மாயம் – மறுபக்கம் கைதிகள் ஓட்டம்” ; உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டம் சிறை ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே தேனி மாவட்ட சிறையில் வலிப்பு வந்ததாக நடித்து காவலர்களை தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடினர். இதனையடுத்து போலீசார் 25 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடியவர்களை தேடி வந்த நிலையில் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 9 சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கைதுகள் தப்பியோடிய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து பருகின்றனர். அந்த வகையில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?

சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?

ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் – மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.

தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.