முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தை விற்பனை வழக்கு; ஜாமீன் மறுப்பு

மதுரையில் சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த வழக்கில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் அமைத்து செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காலத்தில் போது இரண்டு குழந்தைகள் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி வேறு நபர்களுக்கு குழந்தைகளை விலைக்கு விற்பனை செய்ததாக காப்பகத்தின் இயக்குனர் சிவகுமார், உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட 7 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் காப்பகத்தின் நிறுவனர் சிவகுமார் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி குழந்தைகளை சட்டவிரோதமாக பிறருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் ஆவணங்களும் முறைகேடாக தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement:
SHARE

Related posts

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்?

எல்.ரேணுகாதேவி

ஊரடங்கை மீறி பட்டாக் கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

Gayathri Venkatesan

பதவி என்பது கிரிமினல் குற்றங்களில் இருந்து தப்பிப்பதற்கு அல்ல: உச்ச நீதிமன்றம் சாடல்

Gayathri Venkatesan