ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கின் மீதான விசாரணையில், செம்மச்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது இதே போன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும், கால்வாய்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்கவும், நீர் தேங்கும் பகுதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து, பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று பாட புத்தகத்தில் மட்டுமே இருக்கும் கால்வாயாக மாறி விடும் என்றும், நீர்நிலைகள்தான் சென்னை போன்ற நகரங்களின் நூரையீரலாக செயல்ப்படுகிறது ( lungs of the city) என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல மாதவரம் ஏரியை துய்மைப்படுத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நீர் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றிய பக்கிகாம் கால்வாயை சென்னை கழிவு நீர் கொட்டும் இடமாக மாற்றுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.