குழந்தைகள் கடத்தல் விவகாரம்: காப்பக நிறுவனர் உட்பட 2 பேர் கைது

மதுரையில் தனியார் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனரும் அவர் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர். மதுரை ரிசா்வ் லைன் பகுதியில், இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி…

மதுரையில் தனியார் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனரும் அவர் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ரிசா்வ் லைன் பகுதியில், இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது. இந்தக் காப்பகத்தை சிவக்குமார் என்பவா் நடத்தி வருகிறார். இங்கிருந்த, மேலூா் பகுதியைச் சோ்ந்த ஐஸ்வா்யா (22) என்ற பெண்ணின் ஒரு வயது மகன் மாணிக்கம் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாகவும், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.

சமூக ஆர்வலர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, குழந்தைக்கு கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு தொடா்பாக கொடுத்த அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதற்கிடையே காப்பகத்தில் இருந்த ஸ்ரீதேவி என்பவரின், 2 வயது பெண் குழந்தை தனத்தையும் காணவில்லை என புகார் கூறப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகள் விற்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவான காப்பக நிறுவனர் சிவக்குமாரையும் நிர்வாகி மதர்ஷாவையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

மதார்ஷா, சிவக்குமார்

இந்நிலையில், சிவக்குமார் மற்றும் மதார்ஷா இருவரையும் தனிப்படை காவல்துறையினர் போடி அருகே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை அழைத்து வரப்படுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.