தமிழ்நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் கிடையாது, 234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு மருத்துவமனையில் புதியதாக 30 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட இடத்தினை திறந்து வைத்தனர்.
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அமைக்கப்படும், நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலாக ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் ஒரு சுகாதாரத்துறை அமைச்சர் கிடையாது.234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர். காலை எழுந்தவுடன் தங்கள் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை கண்காணிப்பதுதான் சட்டமன்ற உறுப்பினர்களின் முதல் பணியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.




