உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது மொத்தமுள்ள 75 உள்ளாட்சி தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் தற்போது வந்துள்ளது. இதில் 67 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி சரிவைச் சந்தித்துள்ளது.
சமாஜ்வாடி கட்சி வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால், கடந்த 2016ல் சமாஜ்வாடி 60 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது. எப்படியாயினும் இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர் வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் குறித்த மக்களின் மனோநிலையைப் பிரதிபலிப்பதாக இருப்பதில்லை என அரசியல் கூர்நோக்காளர்கள் கருதுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 3,000 பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள், 75 பஞ்சாயத்துத் தலைவர்களை மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது பாஜகவின் யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




