500, 1000 ரூபாய்களுக்காக 5 ஆண்டு அடமானம் வைக்க போகிறிர்களா என பாஜக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது..
ஈரோடு கிழக்கு தேர்தலில் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் இந்த மாதிரி அராஜக தேர்தலை ஏற்கீறிர்களா? இந்த மாதிரி பரிசு பொருட்களை கொடுத்துத்தான் தேர்தல் நடத்த வேண்டுமா? அப்படிபட்ட கட்சிகள் இருக்கனுமா? அப்படி தான் வாக்களிக்க வேண்டுமா? என மக்களிடம் நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளர்களுக்கு சராசரியாக ரூபாய் 20,000 மேல்
செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல்
வளர்ச்சி பின்னால் செல்லப்போகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசம்
தமிழகத்தை விட வளர்ந்து விடப்போகிறது.
இதையும் படியுங்கள் : புதிய மதுபான கொள்கை வழக்கு – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது!
அரசியல் கட்சிகள் கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுக்கின்றனர். ஆட்சியில் கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்கின்றனர். இதனால், அரசியலில் இருந்து நல்லவர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டார்கள்.
இளைஞர்களை அரசியலுக்கு வாருங்கள் என்று அழைத்தால் ஈரோடு கிழக்கு தேர்தலை பார்த்து தெரித்து ஓடுகின்றனர். ஒரு தேர்தலுக்கு தொகுதிக்கு 45 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. அதுவே இடைதேர்தல் என்றால் 100 கோடியை தாண்டுவிடுகிறது. அதுவே ஆளுங்கட்சி எனில் 250 கோடி வரை செலவு செய்யப்படுகிறது.
தேர்தல் விதிமீறல் தொடர்பான எந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிற்பதில்லை. அதனால் அதுதொடர்பான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தலைகுனிவை ஏற்படுத்த உள்ளது. மக்கள் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.
அரவக்குறிச்சியில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை, அதன் வளர்ச்சி அதலபாதாளத்தில் உள்ளது. அதுபோன்று, ஈரோடு கிழக்கு மாற வேண்டுமா ?. அதற்கு சாட்சியாக அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்த நானே உதாரணம். 2024 தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா ?.
ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தை பத்திரிக்கையாளர்கள் கண்ணாடி போட்டு காண்பித்து விட்டார்கள். அதற்கு முதலில் என் வணக்கங்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சரின் அறிவிப்பு என்பது தேர்தல் தோல்வி பயத்தில் தான் அறிவித்து விட்டதாக எண்ணத் தோன்றுகிறது.
முதலமைச்சர் பிரசாரத்தில் அறிவித்ததை நான் வரவேற்றாலும், சொன்ன விதம், இடம், நேரம் தவறு. எனவே அறிவித்த படி பழைய பாக்கியை மீதமில்லாமல் பெண்களுக்கு வழங்க வேண்டும். தனது மகன் செங்கலை எடுத்து வந்தததால் தான் 2021 ஆட்சிக்கு வந்தோம் என கூறுவது முதலமைச்சர் அவரையே அவமானப்படுத்திக்கொள்வதாகும்.
2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை. இன்னும் எத்தனை நாள் செங்கல் விவகாரத்தை பேசி மக்களை ஏமாற்றுவீர்கள்.” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
– யாழன்







