மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் விவாதிப்பார் என கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எழுதிய, ‘பிலாங்கிங் எ ஜர்னி ஆப் லவ்’ என்ற நூலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் விஜய் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை, டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா என்ற நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.




