தவெக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்க ளுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவோடு நடந்து வருகிறது. த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெறாத 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மன்னார் குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதலமைச்சரின் அரசு இல்லமான பாமணி இல்லத்தில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொளத்தூா் உள்பட 6 தொகுதிகள் இடைத்தோ்தல் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.




