ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் 4-வது நாளான நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி, நடப்பு சாம்பியனும், பரம எதிரியுமான பாகிஸ்தான் ‘ஏ’ அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ‘ஏ’ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் 79 ரன்களும், மாஸ் சாதகத் 59 ரன்களும், பர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்தனர். ஷமில் ஹுசைன் 33 ரன்களும், அப்துல் சமத் 28 ரன்களும், முகமது இம்ரான் ரந்தாவா 23 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய ‘ஏ’ அணி களமிறங்கியது. சூர்யவன்ஷி 11 ரன்களுடனும், அடுத்து வந்த ஆயுஷ் பதோனி டக் அவுட்டும் ஆக இந்தியா 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அபிஷேக் சர்மா – கேப்டன் திலக் வர்மா களத்தில் உள்ளனர். இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.