முதலமைச்சர் விஜய் இயற்கை வளங்கள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி கூடுகிறது. இதில் 2026-27-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் நாள் தோறும் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் துறை செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

அந்த வலையில் இன்று இயற்கை வளங்கள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கனிமவளக் கொள்ளையை தடுப்பது குறித்தும், துறை செயல்பாடுகள் மற்றும் மேம்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டிகே.பிரபு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) சுன்சோங்கம் ஜடக் சிரு, மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.