முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டார்…!

முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் அளித்த ஆதரவு மூலம் தவெக ஆட்சியமைத்துள்ளது. தமிழ் நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.

முதலமைச்சராக பதவியேற்ற விஜய், தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இது முதலமைச்சராக பதவியேற்ற பின் அவர் மேற்கொள்ளும் முதல் டெல்லி பயணமாகும்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க உள்ளார். இதனால் டெல்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகமான சேவா தீர்த் பவனில் சந்திக்கிறார். தொடர்ந்து மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமீத் ஷா வை அடல் ஆவாஸ் ஊர்ஜா பவனில் சந்திக்கிறார்.

பின்னதாக முதலமைச்சர் விஜய் மாலை 7.30 மணிக்கு மத்திய நிதியமைச்சரின் அலுவலகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.