சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற
4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் 68 நாடுகள் பங்கேற்ற 48-வது உலகத் திறன் போட்டிகளில், 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medals for Excellence) வென்று இந்தியா
10-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 63 திறன் பிரிவுகளில் களம் கண்ட 70 நபர்கள் கொண்ட இந்திய அணியில், தமிழ்நாட்டிலிருந்து 12 நபர்கள் பங்கேற்றனர். இவர்களில் 5 நபர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டிகளில் Dental Prosthetics பிரிவில் . முகமது சலாம், வெள்ளிப் பதக்கமும், Intelligent Security Technology பிரிவில் ராகுல், Mobile Applications Development பிரிவில் அர்ஜுன், Plastering and Drywall Systems பிரிவில் சுரேந்திரன், Jewellery பிரிவில்ஜாய் தாஸ் ஆகியோர் சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medals for Excellence) வென்றுள்ளனர். இச்சாதனைகள், திறன் மேம்பாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் ஆற்றலை, சர்வதேசத் தரத்திற்கு இணையாக உயர்த்த அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகின்றன.
இந்த உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், வெள்ளிப் பதக்கம் வென்ற முகமது சலாம் அவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medals for Excellence) வென்ற . ராகுல், அர்ஜுன், சுரேந்திரன், ஜாய் தாஸ் ஆகிய 4 நபர்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்ற சுரேஷ் குமார், கோகுலகண்ணன்,
முகமது மபாஜ், அஸ்வின், ரோஹித், செல்வி தனுஸ்ரீ மகேஷ், மோகன்ராஜ் ஆகிய 7 நபர்களுக்குத்
தலா 2 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை என மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைவர் சாய்குமார், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




