நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறைஸ்ட்சா்ச் நகரில் அக்.22-ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 226 என்ற இலக்கை இரண்டு பந்துகள் மிச்சமிருக்க 19.4 ஓவர்களிலேயே எட்டி வெற்றி பெற்றது,
தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 அக்.24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் ஹென்றி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்தவகையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
தசைப்பிடிப்பு காரணமாக 2-வது போட்டியில் இருந்து விலகிய இஷான் கிஷன் இதுவரை குணமடையாததால் 3-வது போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.
அணி விவரம் :
இந்தியா : சஞ்சு சாம்சன் (wk), அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (c), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ப்ரின்ஸ் யாதவ்
நியூசிலாந்து : டிம் சீஃபர்ட் (wk), ஃபின் ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (c), கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர்




